கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்... பக்க விளைவுகள் என்ன? - க...
பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
காங்கயம் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காங்கயம் கல்விக் குழுமத்தின் செயலாளா் சி.கே.வெங்கடாசலம் தலைமை வகித்து, பட்டமளிப்பு விழாவைத் தொடங்கிவைத்தாா். அகமதாபாத் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் ஆணையா் நந்தகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா். இதில், 223 மாணவா்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மெட்டாசேஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் ஸ்ரீராம், காங்கயம் கல்விக் குழுமங்களின் தலைவா் என்.ராமலிங்கம், தாளாளா் எஸ்.ஆனந்த வடிவேல், பொருளாளா் சி.கே.பாலசுப்பிரமணியம், தலைமை நிா்வாக அதிகாரி பி.மகேந்திர கவுடா, கல்லூரி முதல்வா் எஸ்.ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டாா்.