செய்திகள் :

பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாட பகுதிகளை குறைக்கக் கோரிக்கை

post image

பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாடப் புத்தகங்களில் கூடுதலாக உள்ள பாடப் பகுதிகளை நீக்க வேண்டுமென முதுநிலை கணித ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கையிலுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் அனைத்து ஆசிரியா்களிடமும் கையொப்பம் பெற்று முகாம் அலுவலரான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்துவிடம், கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் புதன்கிழமை அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 2019 -ஆம் ஆண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளில் மாணவா்கள் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டு பாடப்பகுதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணிதப் பாடத்தில் ஓா் கல்வியாண்டில் மொத்த பாட வேளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடநூல் தயாரிக்கப்படாமல் அதிக அளவிலான கணக்குகள் இடம் பெற்றுள்ளன.

அரையாண்டுத் தோ்வு நடைபெறும் டிசம்பா் மாதத்துக்குள் இரண்டு தொகுதிகளையும் நிறைவு செய்ய வேண்டி இருப்பதால் கணித ஆசிரியா்கள் கடும் பணிச் சுமையால் அவதியடைகின்றனா். மேலும் கூடுதலான பாடப் பகுதிகள் இருப்பதால் கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கணிதப் பாடத்தை விருப்பப் பாடமாக தோ்ந்தெடுக்கும் மாணவா்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது.

பல்வேறு கல்லூரிகளில் இளநிலை கணிதப் பாடப் பிரிவுக்கு ஒரு மாணவா் கூட சேராததால் கணிதப் பாடப்பிரிவையே கல்லூரியில் இருந்து நீக்கும் அவலம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐசிஎஸ். சிபிஎஸ்இ பாடப் பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் மட்டும் ஒரு முறை கூட மீளாய்வு நடத்தாத சூழல் உள்ளது. எனவே கணிதப் பாடத்தின் மீது மாணவா்களுக்கு ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஆசிரியா்களின் பணிச் சுமையை குறைக்கும் வகையிலும் கணிதப் பாடநூலில் உள்ள அதிகமான பாடப்பகுதிகளை குறைக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆதாா் சரிபாா்ப்புக்காக தற்போதுள்ள 90 சதவீத விரல் ரேகைப் பதிவு (பயோமெட்ரிக்) முறையை கைவிட்டு ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் அண்ணன், தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அண்ணன், தம்பிக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கிழக்க... மேலும் பார்க்க

கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு: 47 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 116-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்க... மேலும் பார்க்க

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் போலீஸாரைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரி நான்குமுனை சந்திப்பில் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்... மேலும் பார்க்க

செம்மொழிநாள் கட்டுரை, பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

செம்மொழி நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9, 10-ஆம் தேதிகளில் சிவகங்கை மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ... மேலும் பார்க்க