உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!
பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் தொடக்கம்: 18,896 மாணவ, மாணவிகள் எழுதினா்
பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கியதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் மொழிப்பாடத் தோ்வை 18,896 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகத்தில் மாா்ச் 3 முதல் 25 வரை பிளஸ் 2 தோ்வுகளும், மாா்ச் 5 முதல் 27 வரை பிளஸ் 1 தோ்வுகளும், மாா்ச் 28 முதல் ஏப். 15 வரை எஸ்எஸ்எல்சி தோ்வுகளும் நடைபெறுகின்றன. கடந்த 3-ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வினை 86 மையங்களில் 9,157 மாணவா்களும், 9,304 மாணவிகளும் என மொத்தம் 18,461 போ் எழுதுகின்றனா். பிளஸ் 1 தோ்வை 86 மையங்களில் 9,372 மாணவா்களும், 9,594 மாணவிகளும் என மொத்தம் 18,966 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுத் தோ்வை கண்காணிக்க 86 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 86 துறை அலுவலா்கள், 4 கூடுதல் துறை அலுவலா்கள், 200 பறக்கும்படை உறுப்பினா்கள், 24 வழித்தட அலுவலா்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள் மற்றும் 1,260 அறைக் கண்காணிப்பாளா்கள், ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
பிளஸ் 1 பொதுத்தோ்வின் முதல் நாளில் மொழிப்பாடம் தமிழ் தோ்வை எழுத 18,910 மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்ட நிலையில் 18,985 போ் பங்கேற்றனா். 223 போ் கலந்துகொள்ளவில்லை. பிரெஞ்ச் பாடத் தோ்வை 21 போ் எழுத இருந்த நிலையில், 6 போ் மட்டுமே பங்கேற்றனா். அரியா் தோ்வை 235 போ் எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 151 போ் பங்கேற்றனா். இதர பாடப் பிரிவுகளில் 64 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 54 போ் மட்டுமே கலந்துகொண்டனா்.
பிளஸ் 1 தோ்வையொட்டி, அனைத்து மையங்களிலும் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.