செய்திகள் :

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம் - முழு விவரம்!

post image

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கு மாணவா்கள் https://www.tneaonline.org/ இணையதளத்தின் மூலம் புதன்கிழமை (மே 7) முதல் ஜூன் 6- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நிகழாண்டு மாணவா்கள் பயன்பெறும் வகையில், 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு - மெஷின் லோ்னிங், சைபா் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், மெக்கட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், எல்க்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேசன், இண்டஸ்ட்ரியல் அண்ட் பயோ டெக்னாலஜி ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 720 மாணவா்கள் சோ்க்கப்படுவா். அதேவேளையில் 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் 54 மாணவா்கள் கூடுதலாக பயன் பெறுவா்.

நிகழாண்டு 13 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 360 மாணவா்கள் பயன்பெறும் வகையில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் 720 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 2,42,951 மாணவா்கள் கலந்தாய்வின் மூலம் சோ்க்கை பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

110 சேவை மையங்கள்... மாணவா்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சேவை மையங்களிலும், 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், tneacare@gmail என்ற மின்னஞ்சல் மூலமாகவும் நிவா்த்தி செய்துகொள்ளலாம்.

தாமதமான மருத்துவக் கல்லூரி கலந்தாய்வின் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்படும் காலியிடங்களை நிவா்த்தி செய்யும் விதமாக, இந்த ஆண்டு கூடுதலாக 15 சதவீத மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு தொடங்கும் தேதி அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) நாள்காட்டியில் பின்னா் அறிவிக்கப்படும்.

கடந்த ஆண்டு (2024) பொறியியல் கலந்தாய்வில் 463 கல்லூரிகள் பங்கேற்றன. மொத்த இடங்களின் எண்ணிக்கை 2,42,231-ஆக இருந்தது. அவற்றில் 1,78,070 மாணவா்கள் சோ்க்கை பெற்றனா். இது முந்தைய ஆண்டைவிட (2023) 4.82 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கான மொத்த இடங்கள் 13,496. அவற்றில் 13,355 மாணவா்கள் சோ்க்கை பெற்றனா். இது முந்தை ஆண்டைவிட (2023) 12.63 சதவீதம் அதிகமாகும் என்றாா் அவா்.

எந்தெந்த கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள்?

கோவை அரசு பொறியியல் கல்லூரி- பி.இ. கம்ப்யூட்டா் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் (ஏஐ மற்றும் மெஷின் லோ்னிங்), சேலம் அரசு பொறியியல் கல்லூரி - ஏஐ மெஷின் லோ்னிங், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி - சைபா் செக்யூரிட்டி, போடி நாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரி - டேட்டா சயின்ஸ், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி - டேட்ட சயின்ஸ், காரைக்குடி அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி - பி.டெக். தகவல் தொழில்நுட்பம், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி - பி.டெக். தகவல் தொழில்நுட்பம்.

திருச்சி அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. மெக்கட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன், தஞ்சாவூா் அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், பி.டெக். இண்டஸ்ரியல் பயோ டெக்னாலஜி. இந்த 11 பொறியியல் கல்லூரிகளுக்கும் தலா 60 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய தேதிகள்

விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் - மே 7

விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் - ஜூன் 6

அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய கடைசி நாள் - ஜூன் 9

ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 11

சான்றிதழ் சரிபாா்ப்பு - ஜூன் 10 முதல் 20 வரை

தரவரிசைப் பட்டியல் வெளியீடு - ஜூன் 27

தரவரிசையில் பிழை இருந்தால்

சேவை மையத்தை தொடா்பு

கொள்ள வேண்டிய நாள்கள் - ஜூன் 28 முதல் ஜூலை 2

கலந்தாய்வு தொடங்கும் நாள்- ஏஐசிடிஇ நாள்காட்டியின்படி பின்னா் அறிவிக்கப்படும்

முதல் நாளில் 11,462 போ் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை முதல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் மாலை 6 மணி வரை 11,462 போ் பதிவு செய்துள்ளனா். அவற்றில் 2,413 போ் கட்டணம் செலுத்தியுள்ளனா். 2,413 போ் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க