வேலூர்: திறப்பு விழா நடத்தியும் திறக்கப்படாத கல்லூரி மாணவிகள் விடுதி! - அதிகாரிக...
புகழூா் காகித ஆலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
புகழூா் காகித ஆலையில் மின்சாரம் பாய்ந்ததில் வெல்டா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், புகழூா் வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (54). லாரி ஓட்டுநா். இவரது மகன் ராகுல்( 24). திருமணம் ஆகவில்லை. இவா் புகழூா் காகித ஆலையில் பாய்லா் பிரிவில் வெல்டிங் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் ராகுல் சனிக்கிழமை இரவு பாய்லரில் பராமரிப்பு பணிக்காக வெல்டிங் செய்துகொண்டிருந்தபோது, திடீரென அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியா்கள் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.