செய்திகள் :

``புதினிடம் பேசினேன்; புதின்-ஜெலன்ஸ்கி சந்திப்பு நடக்க உள்ளது! அது எங்கே?'' - ட்ரம்ப்

post image

கடந்த 15-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்தது.

சிறப்பான சந்திப்பு

இதையொட்டி நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்ரம்பை சந்தித்தார்.

கடந்த பிப்ரவரி மாதமும், ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு அமெரிக்காவில் நடந்தது. அது ஜெலன்ஸ்கிக்கு நல்ல சந்திப்பாக அமையவில்லை.

இந்த முறை அப்படி ஆகிவிடக்கூடாது என்று ஜெலன்ஸ்கி உடன் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு ஐரோப்ப நாடுகளின் தலைவர்களும் ஜெலன்ஸ்கியும் அமெரிக்காவிற்கு பயணமாகினர்.

இந்தச் சந்திப்பு பிப்ரவரி மாதம் போல அல்லாமல், சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பு மிகவும் நல்ல சந்திப்பு ஆகும்.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு, ஓவல் ஆபீஸில் அடுத்தக் கட்ட சந்திப்பு நடந்தது.

மிக்க மகிழ்ச்சி

அந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவின் ஒத்துழைப்போடு, பிற ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு கொடுக்க உள்ள பாதுகாப்பு உறுதி குறித்து பேசப்பட்டது.

ரஷ்யா/உக்ரைன் அமைதிக்கான வாய்ப்பு குறித்து அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

சந்திப்புகள்

சந்திப்பின் இறுதியில், நான் அதிபர் புதினுக்கு போன் செய்து, அதிபர் புதின் மற்றும் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். இந்தச் சந்திப்பு நடக்கும் இடத்தை இன்னும் தீர்மானிக்கவில்லை.

அந்த மீட்டிற்கு பிறகு, நான், அவர்கள் இருவர் என முத்தரப்பு சந்திப்பு நடக்கும். மீண்டும், இது ஒரு நல்ல விஷயம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் போர் நிறுத்தத்திற்கு இது ஆரம்ப படி.

துணை அதிபர் ஜே.டி வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்யா, உக்ரைனுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

"கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி உண்டு... அது எடப்பாடிக்கு இல்லை" - முத்தரசன் பேச்சு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டையொட்டி சேலம் போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், "தமிழகம் எந்த திசையில் செல்ல வ... மேலும் பார்க்க

`எடைக்கு எடை புது நாணயம்; தடபுடல் ஊர்வலம்' - மக்கள் அன்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சி!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ளது தாணிக்கோட்டகம் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பணியாற்றினார். இவர் ஓய்வு பெற்ற நிலையில் தாணிக்கோட்டகம் கிராமத்த... மேலும் பார்க்க

நகர மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி; சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் கைப்பற்றிய திமுக!

சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்றத் தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக-விலிருந்து 9 உற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள்: "திருமாவளவன் கூறுவது சரியல்ல" - பணி நிரந்தரத்தை விவரிக்கும் CPM பெ.சண்முகம்

சென்னையில் தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாகப் போராடிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு நீதிமன்ற உத்தரவு பெயரில் வலு... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழுவில் எழுந்த அதிமுக ஆதரவுக் குரல்கள்; உணர்ச்சிவசப்பட்ட ராமதாஸ் - என்ன நடந்தது?

`அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம்...’பாட்டாளி மக்கள் கட்சியில், மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், ஒன்பது மாதங்களைக் கடந்து உச்சம் தொட்டுள்ள நிலையில், ராம... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரைகுறை ஆடைகளுடன் வரும் பெண்களுக்கு ரெஸ்டோ பாரில் அனுமதி இலவசம்’ - அரசை சாடும் அதிமுக

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், ``புதுச்சேரியில் புற்றீசல் போல ரெஸ்டோ பார்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு ரெஸ்டோ பாரில் நடைபெற்ற கொலை தொடர்பாக காவல் ... மேலும் பார்க்க