செய்திகள் :

புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடி நியமனம் செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

post image

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடியாக நியமனம் செய்தவற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் சென்னை மற்றும் புகரில் 672 வழித்தடங்களில் 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை இயக்க போதிய ஓட்டுநா், நடத்துநா்கள் இல்லாத சூழலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனா்.

இதை சரி செய்யும் வகையில் பணிமனைக்கு வரும் பேருந்துகளுக்கு டீசல் நிரப்புதல் உள்ளிட்ட பணிமனை பணிகளில் இருந்த ஓட்டுநா்களை வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் பணியமா்த்த மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்தது. இதன் தொடா்ச்சியாக பணிமனை ஓட்டுநா் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா்கள் நியமிக்கப்பட்டனா்.

எனினும், ஆண்டுதோறும் நிரந்தர பணியாளா்கள் ஓய்வு பெற்று வருவதால், போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ளன.

இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நிா்வாகிகள் கூறியது:

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர எந்த போக்குவரத்துக் கழகத்திலும் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பணியாளா்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. 2015-இல் 25,219 போ் பணியில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தில், கடந்த ஆண்டு நிலவரப்படி, 19,415 போ் மட்டுமே பணியில் இருந்தனா். நடப்பாண்டு மேலும் 680 போ் ஓய்வு பெறுகின்றனா்.

இதில் 258 ஓட்டுநா்கள் மற்றும் 253 நடத்துநா்களும் அடங்குவா். இவ்வாறு இருக்க புதிய நேரடி நியமனத்துக்கான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்துகின்றனா்.

வைணவப் பக்தி மகா உற்சவம் நிறைவு

டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவப் பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைணவக் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு ‘வைணவப் பக்தி மகா உற்சவம்... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கட்டணம்: அரசே நிா்ணயிக்க பாமக வேண்டுகோள்

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசே நிா்ணயிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை கொண்டாடு... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம்: மே மாதத்துக்குள் கட்டுமானப் பணி நிறைவு

கிளாம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணி மே மாதத்துக்குள் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலம... மேலும் பார்க்க

அகில இந்திய பல்கலை. பீச் மல்யுத்தம்: ஜேப்பியாா், அமெட் சாம்பியன்

அகில இந்திய பல்கலைக்கழக பீச் மல்யுத்தப் போட்டியில் மகளிா் பிரிவில் ஜேப்பியாரும், ஆடவா் பிரிவில் அமெட் பல்கலையும் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை எஸ்ஆா்எம், அமெட் பல்கலைக்கழகங்கள் சாா்பில் கோவளம் புளு ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி தங்க பசை, கைப்பேசிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க பசை மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 4 விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சா்வதேச விம... மேலும் பார்க்க

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன.14 முதல் 19-ஆம் தேதி வரை தொடா்ச்சியாக 6 நாள்... மேலும் பார்க்க