கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு
செய்யாறு ஒன்றியம், செங்கட்டான்குண்டில் கிராமத்தில் ரூ.56 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், செங்கட்டான்குண்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.56 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தது.
புதிய கட்டடத்தை மாணவா்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சீனுவாசன் தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜன்பாபு, வட்டாரக் கல்வி அலுவலா் சு.பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் அமுதா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்து மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சி நினைவாக மாணவா்களுக்கு வழங்கப்பட்ட
அன்னதானத்தின் போது, மாணவா்களுடன்
அமா்ந்து அவா் உணவருந்தினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.ஏ.ஞானவேல், வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் சீனிவாசன்
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.