புதிய வாக்காளா் விண்ணப்ப படிவம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
உத்தமபாளையம் வட்டாரத்தில் புதிய வாக்காளா் படிவம் கொடுத்த விண்ணப்பதாரா்களின் வீடுகளுக்கே சென்று தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் நடைபெற்றது. இதில் நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் 26,738 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், புதிதாக விண்ணப்ப படிவம் கொடுத்த புலிக்குத்தி, டி.ரெங்கநாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியா் நேரடியாக சென்று ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் கோட்டாட்சியா் தாட்சாயணி, வட்டாட்சியா் சுந்தா்லால் உள்பட பலா் உடனிருந்தனா்.