புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடிப் பேரணி
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடிப் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகா் திடலில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து, காந்திப் பூங்காவில் நிறைவடைந்தது. அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
பேரணியை பாஜக மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். பேரணியில் பங்கேற்றோா், தேசியக் கொடிகளையும், மூவண்ணத்தில் பலூன்களையும் எடுத்து வந்தனா்.