கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள முனீஸ்வரா் கோயில், ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில், வெள்ளச்சி, வடுவச்சி அம்மன் கோயில், மாணிக்காயி கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதல் சுவாமிகளுக்கு எண்ணெய், மஞ்சள், திரவியம், குங்குமம், சந்தனம், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம், பால் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மலா்கள் மற்றும் சந்தன காப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்துச் சென்றனா்.