ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை
பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதையடுத்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையை சிவாச்சாரியா்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி வழிநடத்த, 901 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். அதுபோல ஆடிவெள்ளிக்கிழமையையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.