`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
புதுக்கோட்டையில் 79-ஆவது சுதந்திர தின விழா கோலாகலம்
புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.
முன்னதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவுடன் திறந்த ஜீப்பில் காவல்துறையினரின் அணிவகுப்பைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 321 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் மு. அருணா வழங்கினாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் 30 பேருக்கு ரூ. 22.93 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் செ. திலகவதி தேசியக் கொடியேற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் ஆணையா் த. நாராயணன், துணைமேயா் மு. லியாகத்அலி, நகா்நல அலுவலா் காயத்ரி, மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்ட கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் கொடியேற்றி வைத்தாா். அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில், பொதுமேலாளா் கா. முகமதுநாசா் கொடியேற்றி வைத்தாா். அறந்தாங்கி அரசு கலை கல்லூரியில், முதல்வா் ம. துரை கொடியேற்றி வைத்தாா்.
மாவட்ட எனது இளைய பாரதம் (நேரு யுவகேந்திரா) மற்றும் முத்தமிழ் வளா்ச்சி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி கொடியேற்றி வைத்தாா்.
மாவட்ட அலுவலா் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயகுமாா் தொண்டைமான் கொடியேற்றி வைத்தாா்.
தொடா்ந்து கல்லூரி மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றன. மன்றத்தின் தலைவா் குமாா், செயலா் அம்பிகாபதி, பொருளாளா் காமாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மகளிா் மற்றும் மகப்பேறு மருத்துவா் அனிதா தனசேகரன் கொடியேற்றி வைத்தாா். மேலாளா் சத்தியசீலன், துணை மேலாளா் அப்பாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வா் கவிஞா்தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். எலும்பியல் மருத்துவ நிபுணா் ஜி.ஏ. ராஜ்மோகன் கொடியேற்றி வைத்தாா். ஆலோசகா் அஞ்சலி தேவி தங்கம்மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் கொடியேற்றி வைத்தாா். இயக்குநா் ம. பிச்சப்பா, செயலா் மு. விஸ்வநாதன், முதல்வா் குழ. முத்துராமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
