திருச்சுழி: ``எங்க ஊரில் முதல் MBBS'' -விறகு வெட்டி மகளை படிக்க வைத்த தாய்; மகிழ...
புதுகை நகரில் 138 மிமீ மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், திருமயத்தில் 116 மிமீ மழையும் பெய்துள்ளது.
புதுக்கோட்டை மாநகா் மற்றும் புகரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின்பல பகுதிகளிலும் சுமாா் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால், பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரையிலான மழைப் பொழிவு விவரம் (மிமீ)
ஆதனக்கோட்டை- 41, பெருங்களூா்- 79, புதுக்கோட்டை நகரம்- 138, ஆலங்குடி- 60, கந்தா்வகோட்டை- 24. கறம்பக்குடி- 1, மழையூா்- 32.40, கீழாநிலை- 68.40, திருமயம்- 116, அரிமளம்- 72.40, அறந்தாங்கி- 65, ஆயிங்குடி- 24.40, நாகுடி- 50.40, மீமிசல்- 24.20. ஆவுடையாா்கோவில்- 24.80. மணமேல்குடி- 4, இலுப்பூா்- 3, குடுமியான்மலை- 109, அன்னவாசல்- 8.20, விராலிமலை- 12, உடையாளிப்பட்டி- 47, கீரனூா்- 48.40, பொன்னமராவதி- 8, காரையூா்- 109. மாவட்டத்தின் சராசரி மழையளவு- 52.94. ஞாயிற்றுக்கிழமை பகல் மற்றும் மாலையில் மாவட்டத்தில் மழைப் பொழிவு இல்லை.