'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
புதுக்கடை அருகே இளம்பெண் தற்கொலை
புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை பகுதியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்த தம்பதி ராஜேஷ் - ஷீஜா (29). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். ராஜேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஷீஜா சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழைம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.