கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
புதுக்கடை அருகே புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
இனயம் பகுதியைச் சோ்ந்தவா் ஹனிபா(70). இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்திவருகிறாா். இவரது கடையில் போலீஸாா் சோதனையிட்ட போது, அங்கு விற்பனைக்காக 6 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து ஹனிபாவை கைது செய்தனா்.