Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்' சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்
‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’
புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் 17-ஆவது மாவட்ட மாநாடு செப்.16,17 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன.
புதன்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவராக எஸ்.ஜனாா்த்தனன், செயலராக ஆா்.மகாதீா், பொருளாளராக ஆா்.தினேஷ், துணைத் தலைவா்களாக குமரேசன் , பிரகாஷ், துணைச் செயலா்களாக கோபால், ஸ்ருதி உள்ளிட்ட 25 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது. புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநில துணைச் செயலா் செல்வராஜ் பேசினாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழில் வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். நீராதாரங்களை பெரிதும் பாதிக்கும் தைலமரக் காடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மலா் உற்பத்தியை பயன்படுத்தி வாசனைத் திரவிய தொழிற்சாலை, முந்திரி சாகுபடியை பயன்படுத்தி முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.
பறிக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், சிஐடியு மாநில செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.