செய்திகள் :

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது: 58). இவர், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியோர் நடத்தி வரும் கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார்.

குவாரியில் சோதனை

இந்நிலையில் தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி மதியம் தொழுகை முடிந்து இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதி திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலி மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், கொலை செய்ய பயன்படுத்திய லாரி உரிமையாளர் முருகானந்தம், அந்த வாகனம் மூலம் விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அந்த குவாரி

அவர்கள் அனைவருக்கும் வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும்,இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அளவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில்தான், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினரான கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.

அந்த குவாரி

மேலும், இதில் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோரும் இந்த ஆய்வில் இணைந்துள்ளனர். கனிமவளத்துறை அதிகாரிகளின் அளவிடும் பணி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும் என்றும் அளவிடும் பணியை முடித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாகவும் கனிமவளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை: மாணவிக்குப் பாலியல் தொல்லை; கட்டாய திருமணம் - காவலர் உட்பட 3 பேர் சிக்கிய பின்னணி!

வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, குழந்தைகளுடன் ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த தம்பதியினரின் 14 வயது மகள், சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வர... மேலும் பார்க்க

வேலூர்: மாயமான பெண் குழந்தை கிணற்றுக்குள் மிதந்த கொடூரம்; கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள தட்டப்பாறை ஏரியின் கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி, விவசாயி. இவரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா, கடந்த 28-ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக்கொண்டிர... மேலும் பார்க்க

பிரியாணிக் கடைக்கு உரிமம் வழங்குவதாகப் பணமோசடி; நீதிமன்ற வாசலில் பாதிக்கப்பட்ட 249 பேர் போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், பிரியாணிக் கடை கிளை அமைப்பதற்கு உரிமம் வழங்குவதாக 4 மாநிலங்களைச் சேர்ந்த 249 பேரிடம் கோடிக்கணக்கான‌ ரூபாய் ஏமாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.இதுதொடர்பாக போலீஸ... மேலும் பார்க்க

ஊட்டி: காரை மறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; மழுப்பிய சார் பதிவாளர்; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் ஷாஜகான். திருப்பூருக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பொறுப்பு ஏற்பதற்காக ஊட்டி... மேலும் பார்க்க

Sexsomnia: ``ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டவர் குற்றமற்றவர் என தீர்ப்பு'' - ஏன்?

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில், டிமோதி மால்கம் ரோவ்லேண்ட் என்ற நாற்பது வயது நபர், செக்ஸோமேனியா என்ற நோய் இருப்பதனால் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றமற்றவர் எனத் த... மேலும் பார்க்க

ECR கார் சம்பவம்; `அரசியல் கட்சிக்கு தொடர்பா?' - காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்... மேலும் பார்க்க