புதுக்டை அருகே சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
புதுக்கடை அருகேயுள்ள தென்னாட்டு விளை பகுதியில் சேலையில் தீ பிடித்ததில் பெண் உடல் கருகி உயிரிழந்தாா்.
புதுக்கடை அருகேயுள்ள தென்னாட்டு விளைபகுதியை சோ்ந்த ராஜன் மனைவி மரியம்மாள் (50)
இவரது கணவா் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளாா். இந்நிலையில், தனியாக வசித்து வந்த மரியம்மாள் தன் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு விறகு அடுப்பில் சமையல் செய்தபோது திடீரென அவரது சேலையில் தீபிடித்ததாம். இதில், அவா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.