செய்திகள் :

`புதுச்சேரி அரசின் ஹோட்டலை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்?’ - அமைச்சர் சொல்வதென்ன?

post image

புதுச்சேரி சுற்றுலா மாநிலம் என்பதால், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் வார இறுதி நாட்களில், கலைப் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது சுற்றுலாத்துறை. அதேபோல கட்டணம், ஒப்பந்தம் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், தனியார் நிறுனவங்களுக்கும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த நடிகை நயன்தாராவின் கணவரும், திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்தார்.

அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன்

அப்போது, புதுச்சேரி கடற்கரை சாலையில் துய்ப்ளே சிலைக்கு பின்புறம் இருக்கும் `சீகல்ஸ்’ ஹோட்டலை ஏற்று நடத்த விரும்புவதாக அனுமதி கேட்டாராம். அதைக்கேட்ட அமைச்சர், அது அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஹோட்டல் என்பதால் அதை தனியாருக்கு கொடுக்க முடியாது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அது லாபகரமாக இயங்கி வருகிறது’ என்றதாக தகவல் வெளியானது. மேலும், விக்னேஷ் சிவன், புதுச்சேரியில் கடற்கரையையொட்டிய சில பகுதிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அப்படி எதாவது ஒரு இடம் கிடைக்குமா? என்று கேட்டதாகவும்,

அதற்கு அமைச்சர் தரப்பில், அந்த பகுதிகள் கடந்த 2017-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு, ஏலத்தின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அதையடுத்து, ``புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மிகப்பெரிய அளவில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதாவது இடம் கிடைக்குமா?” என்று விக்னேஷ் சிவன் கேட்டதாகவும், `சீகல்ஸ் ஹோட்டலை ஒட்டியிருக்கும் பழைய துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு வளாகம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் அங்கு சுமார் 4,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க முடியும். அந்த இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தனியாருக்கு அனுமதி வழங்குகிறோம். ஜி.எஸ்.டி-யுடன் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை செலுத்திவிட்டு, அங்கு நீங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம்” என்றாராம் அமைச்சர். அதையடுத்து பழைய துறைமுக வளாகத்தை சுற்றிப் பார்த்துவிட்டு சென்றிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

புதுச்சேரி அரசு

அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக வெளியான தகவல், சர்ச்சையான நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் இதுகுறித்துக் கேட்டோம். ``திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், அயல் நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளைப் போல புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக நடத்துவதற்கு அனுமதி கேட்டுத்தான் வந்தார். புதுச்சேரியில் பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எந்த தனியார் நிறுவனமும் அரசை அணுகலாம். கட்டணம் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. விக்னேஷ் சிவனும் அப்படித்தான் அணுகினார்” என்றிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

புதுச்சேரி: `பள்ளியை இடித்துவிட்டு ரெஸ்டோ பார் கட்டுகிறோமா?’ - காங்கிரஸ் புகாருக்கு சபாநாயகர் பதில்

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``என்னுடைய தொகுதியான மணவெளி சின்ன வீராம்பட்டினத்தில் இருக்கும் அரசு ஆரம்பப் பள்ள... மேலும் பார்க்க

குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும் கட்சியா எதிர்க்கட்சிகளா?!

குளிர்கால கூட்டத்தொடர்கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 20-ம் தேதி வரையில் நடக்கிறது. முன்னதாக எதிர்கட்சிகளிடம் 'அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பழுதடைந்திருக்கும் நீர்த்தேக்க தொட்டி; அச்சத்தில் மக்கள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர் பகுதியில், 1வது வார்டில் அமைந்துள்ளது இந்த இடம்.இவ்விடத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அதனைச் சுற்றி ஏழு ஊர்கள் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமை... மேலும் பார்க்க

Adani Ports: $553 மில்லியன் அமெரிக்க கடனை நிராகரித்த அதானி துறைமுகம்..! பின்னணி என்ன?

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கண்டெய்னர் முனையமாக உருவாகி வருகிறது கொழும்பு மேற்கு சர்வதேச முனையம். இந்த முனையத்தில் அதானி துறைமுகத்திற்கு 51 சதவிகிதம் பங்கு உண்டு. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம... மேலும் பார்க்க

Vaikom : "பெரியாருக்கு புகழ் மாலை; கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன்" - மு.க.ஸ்டாலின் உரை

பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டிருக... மேலும் பார்க்க