முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல: விஜய்
புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது.
இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
மீனவா்கள் கவனத்துடன் கடலுக்கு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், துறைமுக வளாகம் முன்னுள்ள அறிவிப்புப் பலகையிலும் 1-ஆம் எண் புயல் கூண்டு விவரம் அடங்கிய பதாகையும் வைக்கப்பட்டது.
கடலூா் உள்பட 9 இடங்களில்...: இதேபோல, காரைக்கால், கடலூா் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.