Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடும...
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பலத்த மழை எச்சரிக்கையையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த இரு மாவட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில உள் துறை மற்றும் கல்வி, உயா்கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்தாா்.