செய்திகள் :

புதுச்சேரி டிஐஜி போட்ட `ஸ்கெட்ச்’ - வழிப்பறி, செயின் பறிப்பின்றி முடிந்த தீபாவளி; குவியும் பாராட்டு

post image

புதுச்சேரியில் எந்தவித குற்றச் சம்பவங்களுமின்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்திருப்பது, மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிலவும் குற்றச் சம்பவங்களுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, காவல் துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறை.

இந்த நிலையில் காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளின் இல்லங்களுக்கும் கணிசமான அளவுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்குச் சென்று விடுவதால், திணறிக் கொண்டிருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

ரோந்துப் பணியில் புதுச்சேரி போலீஸார்

 இப்படியான சூழலில், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து பாதிக்கப்படுவது, பணியில் இருக்கும் போலீஸாரும்தான். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் அரங்கேறும் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், பொதுமக்களை நிம்மதியிழக்கச் செய்துவிடும்.

அதேபோல வழிப்பறி, செயின் பறிப்பு, கடைகளுக்குச் செல்பவர்களின் பைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போன்ற வழக்குகள் பதிவாகாமல், புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகை முடிந்ததில்லை.

அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு, குற்றச் சம்பவங்கள் இல்லாத தீபாவளி பண்டிகையை முடிக்கத் திட்டமிட்டார் டி.ஐ.ஜி சத்திய சுந்தரம்.

அதன்படி அவர் முதல் ஸ்கெட்ச், ஐ.ஜி, டி.ஜி.பி, ஆட்சியர், நீதிபதிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த போலீஸாரை, தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே வரவழைத்தார்.

அத்துடன் அவர்களை சீருடை அணிந்து, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வைத்தார். பொதுவாக மேற்கண்ட உயரதிகாரிகளின் வீடுகளில் இருந்து போலீஸாரை திரும்பப் பெற்றால் அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், காவல்துறை உயரதிகாரிகள் அந்தப் பக்கம் திரும்ப மாட்டார்கள்.

சிறப்பு கமாண்டோ படையினர்

ஆனால் அவர்கள் அனைவரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினார். அதேபோல காவல்துறை தலைமை அலுவலகம், சி.ஐ.டி, சிக்மா செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்டவர்களையும் மக்கள் கூடும் இடங்களில் சீருடையுடன் நிற்க வைத்தார்.

அவர்களுடன் பயிற்சி பெற்ற சிறப்பு கமாண்டோக்களையும் களத்தில் இறக்கினார். இப்படி இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 2,000 போலீஸார் நகரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல சீனியர் எஸ்.பி கலைவாணன், காவல்துறை கிழக்கு எஸ்.பி ஸ்ருதி, போதை தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாருடன், நகர்ப் பகுதி தினமும் 5 முதல் 10 கிலோமீட்டர் ரோந்து சென்றார்.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கு இனிப்பு வழங்கும் டிஐஜி சத்தியசுந்தரம்

அதனால் நகரத்தில் எங்கு திரும்பினாலும் போலீஸார் நின்று கொண்டிருந்ததால், ஒரு வழிப்பறியோ அல்லது திருட்டு சம்பவமோ நடைபெறவில்லை. அதனால் புதுச்சேரி போலீஸாருக்கு சமூக வலைத்தளங்களில் பாதுகாப்புகள் குவிந்து வருகின்றன.

பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று... மேலும் பார்க்க

``குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன... மேலும் பார்க்க

Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்

பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்... மேலும் பார்க்க

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" - ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் மழை அதிகமாகும் வாய்ப்பு; போர்கால நடவடிக்கை தேவை" - திமுகவை வலியுறுத்தும் பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது?

ரஷ்யா - உக்ரைன் போர் பொறுத்தவரையில், ஆரம்பதில் இருந்தே அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நின்று வருகிறது.சுமுக உறவு ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவர் பெரிதும் ஆதரவு தந்துவருவது அவரின் நண்பர... மேலும் பார்க்க