செய்திகள் :

புதுச்சேரி: `புதிய மதுபான ஆலை அனுமதியில் ஊழல்!’ -சிபிஐ விசாரணை கேட்டு ஆளுநரை சந்தித்த காங்கிரஸ்

post image

புதுச்சேரியில் புதிதாக 8 மதுபான ஆலைகள் அமைக்க முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எம்.பி வைத்திலிங்கம் தலைமையில் ஆளுநரை சந்தித்து மனு அளித்திருக்கின்றனர் காங்கிரஸார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு 8 அயல்நாட்டு மதுபானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தற்போது அனுமதி வழங்க முடிவு செய்திருக்கிறது.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

ஆனால் ஏற்கெனவே ஆளுநராக இருந்த தமிழிசை அவர்கள், இந்த புதிய ஆலைகளுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் திடீரென 8 மதுபான ஆலைகளுக்கு திட்டக் குழுமத்தின் அனுமதியும், தொழில்துறையின் முதல் கட்ட அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு இன்னும் ஆளுநரின் ஒப்புதல் பெறாத நிலையில், அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெற்றிருக்கிறார்கள். இதில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன.

இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக நினைக்கிறோம். பா.ஜ.க எம்.எல்.ஏ-வான கல்யாணசுந்தரம் `ஒரு ஆலைக்கு ரூ.10 கோடி லஞ்சம் வாங்கியிருக்கின்றனர்’ என்று சட்டப்பேரவையிலேயே குற்றம் சுமத்தியிருந்தார். அதற்கு இதுவரை முதல்வர் உள்ளிட்ட யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிகமாக நீர் உறிஞ்சும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை என்ற விதிகளை மீறி தற்போது அனுமதி தரப்பட்டிருக்கிறது. யாருடைய உத்தரவின் பேரில் நகரமைப்பு குழுமத்தின் அனுமதி கொடுக்கப்பட்டது ?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இதற்காக குளோபல் டெண்டரை வைக்காமல், ரகசியமாக அனுமதி கொடுக்கப்பட்டது ஏன் ? இதன்மூலம் பலகோடி ரூபாய் ஊழல் செய்வதற்கு ஆளும் கட்சியினர் திட்டமிட்டிருக்கின்றனர். புதிய மதுபான ஆலைகள் அமைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் அனுமதி கொடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் நடைபெற்றிருக்கும் ஊழல் குறித்து விசாரிக்க ஆளுநர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.

``பிரபாகரனை சீமான் இழிவுபடுத்துகிறார்; சனாதன கும்பலுக்கு பாதை அமைத்து கொடுக்கிறார்'' -திருமாவளவன்

சமீப நாள்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார்.இதற்கு பெரியாரிய இயக்கங்கள், திமுக தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்து ... மேலும் பார்க்க

'நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை... அந்த போட்டோவில் இருப்பதும் நான் இல்லை' - சீமான் சொல்வதென்ன?

இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இ... மேலும் பார்க்க

TVK: 'பனையூரில் விஜய்; ஆஜரான நிர்வாகிகள்; மா.செ-க்களுடன் பெர்சனல் மீட்டிங்'- விஜய்யின் திட்டம் என்ன?

பனையூரில் உள்ள தவெகவின் தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் முக்கிய மீட்டிங்கை நடத்தி வருகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். மாவட்டச் செயலாளர்களின் அறிவிப்பு சம்பந்தமான இந்த மீட்டிங் குறித்து ஸ்பாட்டிலிருந்து ... மேலும் பார்க்க

Stalin: 'நேற்று கட்சித் தொடங்கியவர்கள் கூட, முதல்வராவோம் என பேசுகிறார்கள்' - ஸ்டாலின் சொல்வதென்ன?

நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினர் 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ( ஜனவரி 24) திமுகவில் இணைந்திருகின்றனர்.மா... மேலும் பார்க்க

`பெரியார் குறித்த சர்ச்சை கருத்து’ - நாம் தமிழர் கட்சியலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள்?

கடந்த சில வாரங்களாகத் தமிழக அரசியலில் தன் சர்ச்சையான கருத்துக்களால் விவாதமாகியிருக்கிறார் சீமான். இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவிகித வாக்கு வங்கியிருந்தாலும், தேர்தல் ஆணையம் நாம் தமிழர... மேலும் பார்க்க

TVK : 'பனையூரில் திடீர் மீட்டிங்; முதற்கட்ட மா.செ அறிவிப்பு?' - நிர்வாகிகளைச் சந்திக்கிறாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகமான பனையூரில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கட்சியின் தலைவரான விஜய் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறதுTVK - வி... மேலும் பார்க்க