கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சில ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு! முடிவுக்கு வருமா சலசலப்பு?