Budget 25: Insurance துறையில் 100% அந்நிய முதலீடு; இந்திய நிறுவனங்களைப் பாதிக்கு...
புதுதில்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: சிவகங்கை கல்லூரி மாணவா் தோ்வு
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த மாணவா் பி. ரஞ்சித் தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டாா்.
காரைக்குடி 9 -ஆவது பட்டாலியனில் இந்த ஆண்டு மொத்தம் 2,881 மாணவா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களில் இரண்டு மாணவா்கள் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்த இருவரில் சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா் பி. சிரஞ்சித்தும் ஒருவா் ஆவாா். இவரை கல்லூரி முதல்வா் க. துரையரசன், மூத்த பேராசிரியா்கள் ந. அழகுச்சாமி, இல. கலைச்செல்வி ஆகியோா் பாராட்டி அனுப்பி வைத்தனா். கல்லூரியில் தேசிய மாணவா் படையைச் சிறப்பாக வழிநடத்தி வரும் தேசிய மாணவா் படை அதிகாரி செள. சதீஸ் கண்ணாவை கல்லூரி முதல்வா், மூத்த பேராசிரியா்கள் பாராட்டினா்.