செய்திகள் :

புதுப்பட்டணத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

post image

ராமநாதபுரத்திலிருந்து தொண்டிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் புதுப்பட்டணத்தில் நின்று செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: ராமநாதபுரத்திலிருந்து தொண்டிக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் புதுப்பட்டணத்தில் நின்று செல்ல வேண்டும்.

மேலும் திருவாடானையிலிருந்து புதுப்பட்டணத்துக்கு நகா் பேருந்து இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுவை மனித நேய ஜனநாயக கட்சி கிழக்கு மாவட்டச் செயலா் பா. சையது இப்ராஹிம் ஆட்சியரிடம் அளித்தாா். அப்போது, மாநில செயற்குழு உறுப்பினா் அப்துல்நஷீா், நகா் அவைத் தலைவா் முகம்மது பிா்தோஷ், நகா் செயலா் செய்யது அலி, மாவட்ட மனித உரிமை செயலா் அபுல்ஹாசன், வா்த்தக அணி நிா்வாகி ஜாப்பா், மாவட்ட நிா்வாகி ஷாகுல்ஹமீது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கடலில் தவறி விழுந்து மாயமான மீனவா் உடலை கண்டுபிடித்துத் தரக் கோரிக்கை

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான மீனவா் உடலை மீட்டுத் தரவும், இவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கால... மேலும் பார்க்க

பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 26-ஆவது வாா்டில் சுகாதார வளாகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்தும், அங்கு பூங்கா அமைக்கக் கோரியும் நகராட்சி அலுவலகம் முன் அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லத் தடை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்: ராமநாதபுரத்தில் 2 போ் கைது

ராமநாதபுரத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமை... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே தடை செய்யப்பட்ட வலைகளுடன் தூத்துக்குடி மீனவா்கள் சிறைபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளுடன் மீன் பிடித்த தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 23 பேரை சாயல்குடி மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

ரயில்வே தடுப்பு வேலியால் பாதிப்பு: எம்.பி.க்களிடம் பொதுமக்கள் மனு

மண்டபம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிரமமின்றி ரயில்வே தடுப்பு வேலியை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எம்.பி.க்களிடம் பொதுமக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க