முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்: கருப்புக் கொடி காட்ட முயன்றவர் கைது - என்ன...
புதுவையில் இன்று அரசு விடுமுறை
புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வியாழக்கிழமை பிறப்பித்தாா். பூஜை கொண்டாட்ட விடுமுறை நாள் நீட்டிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 25-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.