புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக். 1 (நேற்று) ஆயுத பூஜை மற்றும் இன்று (அக். 2) விஜயதசமி ஆகிய இரண்டு நாள்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையே அக். 3 ஆம் தேதி வேலை நாளாக இருந்தது.
இந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி புதுவையில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (03.10.2025) வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.