புதுவை மத்திய பல்கலைக்கழகம் பெங்களூரு நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூா் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வு நோக்கில் புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் மேற்கொண்டன (படம்).
நிகழ்ச்சிக்கு புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு தலைமை வகித்தாா்.
புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்துமத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனத் தலைமை இயக்குநா் பி.ஏ. சவாலே விளக்கினாா்.
பல்கலைக்கழகத்தின் சா்வதேச உறவுகள் பிரிவின் டீன் ந. விக்டா் ஆனந்த்குமாா் வரவேற்றாா். பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் பெ. ஏழுமலை ஒப்பந்த நோக்கம் குறித்து பேசினாா். மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப புலத்தின் டீன் பி.எம். ஜாபா் அலி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழக கல்வி இயக்குநா் க. தரணிக்கரசு, பதிவாளா் (பொ) ரஜனீஷ் பூட்டானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.