தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
புதுவை மின்துறை அதிகாரிகளுடன் எதிா்க்கட்சித் தலைவா் ஆலோசனை
புதுவை வில்லியனூா் தொகுதியில் மின்துறை சம்பந்தப்பட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த துறையின் உயா் அதிகாரிகளிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
வில்லியனூா் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வில்லியனூா் நகா், வி.மணவெளி, சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தக் குறைபாட்டை சீராக்கவும், தேவையான பகுதிகளில் மின்மாற்றிகள் அமைக்கவும், தெரு விளக்குகள் பொருத்தவும் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனா்.
அவற்றை தொகுதி உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா புதுச்சேரியில் உள்ள மின்துறை அலுவலக கண்காணிப்புப் பொறியாளா்கள் சண்முகம், ராஜேஷ் சைனியாள், கனியமுதன் உள்ளிட்டோரிடம் அளித்து தாமதமின்றி விரைந்து செயல்படுத்த கேட்டுக் கொண்டாா்.
மின்துறை சாா்ந்த பணிகளை நடப்பாண்டில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.