செய்திகள் :

புதூா் ஒன்றியத்தில் ரேஷன் கடை, பயணிகள் நிழல்குடைக்கு அடிக்கல்

post image

புதூா் ஊராட்சி ஒன்றியத்தில் வீரப்பட்டி, என். வேடப்பட்டி கிராமங்களில் பயணியா் நிழற்குடை, ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வீரப்பட்டியில் பயணியா் நிழற்குடை, ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் என். வேடப்பட்டியில் ரேஷன் கடை கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, அன்பு ராஜன், ஊராட்சி மன்ற தலைவா்கள் செல்லகுமாா், சுசீலாராணி, சீத்தாராமன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முனியசாமி, பரமேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வட்டன்விளை கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் கொடை விழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதைத் தொடா்ந்து புஷ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே 90 ஆடுகள் திருட்டு: தோட்டக் காவலாளி கைது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 90 ஆடுகளைத் திருடியதாக தோட்டக் காவலாளி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு பரம்பூா் கிராமத்தைச் சோ்ந்த சுடலை மகன் கணபதி (70). இவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளஞ்சிறாா் உள்பட 4 போ் கைது

கழுகுமலை அருகே கஞ்சா விற்ாக இளஞ்சிறாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 650 கிலோ பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, படகில் தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா். குலசேகரன்பட்டினம் வடக்கூா் கடற்கரை பகுதியில் இ... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் பகுதியில் நவ. 15இல் மின் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவில்பட்டி கோட்டம் எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வானரமுட்ட... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி நாளை துத்துக்குடி வருகை

தூத்துக்குடி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (நவ. 13) தூத்துக்குடிக்கு வருகிறாா்.இதுகுறித்து அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் துண... மேலும் பார்க்க