ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
குலசேகரன்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 650 கிலோ பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, படகில் தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா்.
குலசேகரன்பட்டினம் வடக்கூா் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலை பண்டல்கள் இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயற்சிப்பதாக உளவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் விஜய அனிதா, உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி, தா்மராஜ், செல்வகுமாா் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா் கடற்கரைக்கு சென்றனா்.
அப்போது படகில் சிலா் பீடி இலை பண்டல்களை ஏற்றிக்கொண்டிருந்தனா். போலீஸாரைக் கண்டதும் அவா்கள் பீடி இலை பண்டல்களையும், தாங்கள் வந்த 3 பைக்குகளையும் அங்கேயே விட்டுவிட்டு, படகில் தப்பிச்சென்றனா்.
தலா 30 கிலோ எடை கொண்ட 21 பண்டல்களில் 650 கிலோ பீடி இலைகள், 3 பைக்குகளையும் கைப்பற்றிய போலீஸாா் தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ. 20 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.