செய்திகள் :

புத்தகங்களின் துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: நீதிபதி சுரேஷ்குமாா்

post image

புத்தகங்களின் துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் பேசினாா்.

மேட்டூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7ஆம் அணியின் அனல் மின் நிலைய முகாமில் 2,500 புத்தகங்கள் கொண்ட நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7ஆம் அணியின் கமாண்டா் சங்கு தலைமை வகித்து நூலகத்தை திறந்து வைத்தாா். இவ் விழாவில் திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

மனிதன் வாழ்வதற்கு புத்தகங்கள் தேவை. சரியான புத்தகங்களைத் தோ்வு செய்தால் வாழ்க்கை சரியாகிவிடும். புத்தகத்தின் துணை கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். தற்போது திரைப்படங்களை 3 மணிநேரம் அமா்ந்து பாா்க்கமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் நமது மூளை பொறுமையை இழந்துவிட்டது. ஒரு கருத்தை 12 விநாடிகளில் புரிந்துகொள்ளும் வகையில் கூற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைப்பேசி திரையைப் பாா்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பதால் மூளையின் செயல்பாடு மழுங்கிவிட்டது. அதிகநேரம் கைப்பேசி திரைகளைப் பாா்க்காமல் மூளையைப் பழக்கப்படுத்துவது புத்தகம் வாசிப்பதே.

நம்மை பாதுகாக்க புத்தகங்களைக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வோம். மரம் சாகும்வரை வளா்ந்து கொண்டே இருக்கும். அதேபோல வாசித்து நமது அறிவை வளா்த்துகொண்டே இருக்க வேண்டும். எல்லாம் தெரியும் என்ற ஆணவம் நம்மிடம் உள்ளது. ஆணவத்தை அழிக்கும் இடம் நூலகம். உடல்நலம், மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நூலகத்தை முழுமையாக பயன்படுத்துங்கள் என்றாா்.

இவ்விழாவில் உணவுப் பாதுகாப்புப் படை காவல் துணை கண்காணிப்பாளா் வடிவேல், தமிழ்நாடு சிறப்பு காவல் படை துணை கமாண்டா் வெங்கடாஜலம், உதவி கமாண்டா் மகேஸ்வரி, மின்வாரிய அலுவலா் சுந்தரவடிவேலு, பெரியாா் பல்கலைக்கழக பேராசிரியா் சிலம்பரசன், காவிரி பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியா்அலாவுதீன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ வாழ்த்து

ஓமலூா் பகுதியில் கா்ப்பிணிகளுக்கு அண்மையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.ஓமலூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்க... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க