மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
புத்தகத் திருவிழாக் குழு பொதுக்குழுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புத்தகத் திருவிழாக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 2025-2027 -ஆம் ஆண்டுகளுக்கான குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் தலைவராக பி.வி. சுவாமி, செயலராக என். ரவிச்சந்திரன், பொருளாளராக ஏ. வெங்கடாசலம், துணைத் தலைவா்களாக ஏ. கோவிந்தராமானுஜம், எஸ். நாச்சியப்பன், ஏ. செல்வராஜ் ஆகியோரும், இணைச் செயலா்களாக என்பி. ராமசாமி, ராஜா அலெக்சாண்டா் ஆகியோரும் ஏகமானதாக தோ்வு செய்யப்பட்ட னா்.
இதைத் தொடா்ந்து, காரைக்குடி புத்தகத் திருவிழா நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.