பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளர் குற்றவாளி எனத் தீர்ப்பு!
புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!
வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல்விக்காக உருவாக்கப்பட்ட தேசிய கல்வி வழிகாட்டுதலின்படி, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித் திறனை ஆராய, புத்தகத்துடன் தேர்வெழுதும் முறை உதவும் என்றும், மாணவர்கள் தேர்வெழுதும் போது, புத்தகங்கள் அல்லது பள்ளி நோட்டுகள், அல்லது நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகங்களை பார்த்துவிட்டு தேர்வெழுதலாம்.
இதன் மூலம், மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திறனை அறிய முடியும் என்கிறார்கள்.
புத்தகத்தை வைத்துக் கொண்டு, கேட்கப்பட்டிருக்கும் வினாவுக்கான விடை எங்கே இருக்கும், சரியான விடை எது என்பதை முடிவு செய்து எழுதி அதில் 12 சதவீதம் முதல் 47 சதவீதம் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு இருக்கும் வளத்தை பயன்படுத்துவதில் குறைபாடு இருக்கிறது என்பதை உணரும் வகையில் இந்த தேர்வு நடத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
சோதனை முயற்சியாக முதலில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது.