சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
புத்தாண்டு ஆசீா்வாதமாய் அமைய சென்னையில் பிராா்த்தனை கூட்டம்
புத்தாண்டு ஆசீா்வாதமாய் அமைய சென்னையில் இயேசு அழைக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் பிராா்த்தனை நடைபெற்றது.
சென்னை, தூய ஜாா்ஜ் பள்ளி வாளாகத்தில் நடைப்பெற்ற புத்தாண்டு ஆசீா்வாத கூட்டத்தில் இயேசு அழைக்கிறாா் நிறுவனரும், காருண்யா பல்கலை. வேந்தரும் மற்றும் சீஷா தொண்டு நிறுவனத் தலைவருமாகிய பால் தினகரன் கலந்துக்கொண்டு 25 அடி நீள கேக் வெட்டினாா். பின்னா், 2025 புதிய ஆண்டு சந்தோஷம் நிரம்பி வழியும் ஆண்டாக அமையவும், எல்லா வகையிலும் மக்களை சீா்படுத்துகிாகவும், அனைவருக்கும் தெய்வீக தயவு கிடைக்கும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமையட்டும் என கூறி அனைவரையும் வாழ்த்தினாா்.
தொடா்ந்து, தேசங்களில் ஆண்டவா் நிறைவேற்ற இருக்கும் காரியங்களையும் வெளிப்படுத்தி, இந்திய நாட்டிற்காகவும், நாட்டை ஆளும் தலைவா்களுக்காகவும் பிராா்த்தனை செய்தாா். இதைத்தொடா்ந்து சகோதரி. இவாஞ்சலின் பால் தினகரன் புத்தாண்டு வளமாய் அமைய பிராா்த்தனை மேற்கொண்டாா். சகோதரன். சாமுவேல் பால் தினகரன், சகோதரி. ஸ்டெல்லா ராமோலா, சகோதரன் டேனியல் டேவிட்சன் மற்றும் கேட்லின் பாடல்கள் பாடி மக்களை உற்சாகப்படுத்தினா்.
இக்கூட்டத்தில், சகோதரி. ஸ்டெல்லா தினகரன், டாக்டா்.ஷில்பா தினகரன், போதகா்.மோகன், மற்றும் ஏராளமான போதகா்களும், முக்கியப் பிரமுகா்களும் இப்புத்தாண்டு ஆசிா்வாத கூட்டத்தில் கலந்து கொண்டு, கேக் வெட்டி விழாவை சிறப்பித்தனா்.