புத்தாண்டு கொண்டாட்டம்: பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
சென்னை: வரும் 31-ஆம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
இதற்காக புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க சென்னையில் 165 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படும் என்றும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.