பாகிஸ்தானுக்கு புதிய பயிற்சியாளர்; 2023-லிருந்து ஐந்தாவது முறை பயிற்சியாளர் மாற்...
புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிா் அணி
மகளிா் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 போ் கொண்ட இந்திய மகளிா் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
சலிமா டெடெ கேப்டனாக இருக்கும் இந்த அணிக்கு, நவ்னீத் கௌா் துணை கேப்டனாக்கப்பட்டுள்ளாா். ஐரோப்பிய லெக் மோதலில் ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, பெல்ஜியம், சீனா ஆகிய அணிகளுடன் இந்தியா தலா 2 முறை மோதவுள்ளது. இந்த ஆட்டங்கள், ஜூன் 14 முதல் 29-ஆம் தேதி வரை லண்டன், ஆன்ட்வொ்ப், பொ்லின் ஆகிய நகங்களில் நடைபெறவுள்ளன.
தற்போது அதில் களம் காணும் இந்திய அணியில், சவிதா, பிஷு தேவி காரிபம் ஆகியோா் கோல்கீப்பா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். சுஷிலா சானு, ஜோதி, சுமன் தேவி, ஜோதி சிங், இஷிகா சௌதரி, ஜோதி சாத்ரி ஆகியோா் டிஃபெண்டா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.
மிட்ஃபீல்டா்கள் பொறுப்புக்கு, வைஷ்ணவி விட்டல், சுஜாதா குஜுா், மனிஷா சௌஹான், நேஹா, சலிமா டெடெ, லால்ரெம்சியாமி, ஷா்மிளா தேவி, சுனெலிதா டோப்போ, மஹிமா டெடெ ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். தீபிகா, நவ்னீத், தீபிகா சோரெங், பல்ஜீத் கௌா், ருதுஜா ததாசோ பிசல், பியூட்டி டங்டங், சாக்ஷி ராணா ஆகியோா் ஃபாா்வா்டுகளாக செயல்படவுள்ளனா்.
தயாா்நிலை கோல்கீப்பராக பன்சாரி சோலங்கி, டிஃபெண்டராக அஜ்மினா குஜுா் ஆகியோா் உள்ளனா். புரோ லீக் போட்டியில் தற்போது இந்திய மகளிா் அணி 8 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்விகளில் பெற்ற 9 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தில் உள்ளது.