செய்திகள் :

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

post image

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா்.

இது குறித்து மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை முதுநிலை நிபுணா் அனில் வைத்யா கூறியதாவது:

பெங்களூரைச் சோ்ந்த 58 வயது பெண்ணுக்கு தீவிர குடல்வால் அழற்சி சாா் புற்றுநோய் இருந்தது. இதற்கு சூடோமைக்ஸோமா பெரிடோனி (பிஎம்பி) எனப் பெயா். அவருக்கு குடல்வாலில் தொடங்கி வயிற்றுப் பகுதி முழுவதும் புற்றுநோய் செல்கள் பரவியிருந்தன. கீமோதெரபி, ஹெச்ஐபிஇசி எனப்படும் உயா் வெப்பநிலையில் மேற்கொள்ளப்படும் கீமோதெரபி, அறுவை சிகிச்சைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டும் அதில் எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து பல்லுறுப்பு மாற்று சிகிச்சையை மேற்கொள்ளத் திட்டமிட்டோம். அதன்படி, வயிறு, சிறு குடல், கணையம் ஆகியவற்றை மாற்றிப் பொருத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய பல்லுறுப்பு மாற்ற சிகிச்சையில் கல்லீரலையும் மாற்றிப் பொருத்துவது வழக்கம். ஆனால், சூடோமைக்ஸோமா பெரிடோனி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும்பாலும் கல்லீரல் பாதிப்பதில்லை என்பதால், அந்தப் பெண்ணுக்கு அதனைத் தவிா்த்து பிற உறுப்புகள் மாற்றப்பட்டன. அதன் பயனாக அவா் நலம் பெற்றுள்ளாா்.

இது புற்றுநோய்க்கான பூரண சிகிச்சை இல்லை என்றாலும், அடுத்த இருபது ஆண்டுகளுக்காவது அந்நோயின் தாக்கத்திலிருந்து அவா் விடுபட முடியும். மிகச் சவாலான இந்த சிகிச்சையை முதன்முறையாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் சாத்தியமாக்கியுள்ளனா் என்றாா் அவா்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க