செய்திகள் :

புற்றுநோய்: 6-ஆவது அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!

post image

ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனக்கு ஆறாவது முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் விழிப்புணர்வு வேண்டியே பதிவிட்டுள்ளதாகப் பாராட்டும் கிடைத்து வருகிறது.

ஒருநாள் உலகக் கோப்பை 2015 ஆம் ஆண்டு வென்ற ஆஸி. கேப்டனாக இருந்தவர் மைக்கேல் கிளார்க். அதே ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

44 வயதாகும் கிளார்க்கிற்கு முதல்முறையாக 2006-இல் முதல்முறையாக அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், 2019இல் நெற்றியிலும் 2023-இல் மார்புப் பகுதியிலும் இருந்த புற்றுநோய் செல்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தோல் புற்றுநோய் என்பது கொடுமையானது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் அதிகமாக இருக்கிறது. இன்று எனது மூக்கின் மீதிருந்து ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்தோம்.

உங்களது தோல்களை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள் என கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வருமுன் காப்பதே சிறந்தது. ஆனால், என்னுடையதில் தொடர்ச்சியான பரிசோதனைகளும் தொடக்கத்திலேயே கண்டறிந்ததும்தான் முக்கியமானது என்றார்.

ஏற்கெனவே, க்ளென் மெக்ராத் ஆஸ்திரேலியாவில் புற்றுநோய்க்கான மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்.

Former Australia captain Michael Clarke has undergone a sixth surgery for skin cancer, this time to remove a lesion from his nose.

கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!

ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களின் தரவரிசைப் பட்டியலில் கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேறியுள்ளார். இந்தியாவின் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா முதலிரண்டு இடங்களில் நீடிக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டு தடை: இந்திய வீரர்களுக்கு ரூ. 200 கோடி இழப்பு! தோனி, கோலி, ரோஹித்துக்கு அதிக பாதிப்பு!

பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர்.பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை ... மேலும் பார்க்க

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய அஸ்வின் குறித்து சிஎஸ்கே நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளது. ஆர். அஸ்வின் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகி மீண்டும் சென்னை அணியுடனே ஐபிஎல் ப... மேலும் பார்க்க

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் திரிபுரா அணியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவனில் விளையாடி வந்த, தமிழக அணியின் முன்னாள் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.RAVICHANDRAN ASHWIN RETIRED FROM IPL மேலும் பார்க்க

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான சதத்தினை பதிவு செய்துள்ளார். சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் காயம் காரணமாக 80 சதவிகித போட்டிகளில் விளையாடாமல் இருந்தா... மேலும் பார்க்க