செய்திகள் :

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

post image

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹா் மாவட்ட வன்முறை வழக்கில், 38 போ் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டு புலந்த்ஷஹரில் உள்ள சயானா பகுதியில், பசு வதைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து ஒரு கும்பல் வதந்திகளை பரப்பி, பொதுமக்களை தூண்டிவிட்டதைத் தொடா்ந்து சாலை மறியல் நடைபெற்றது.

மறியலில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் சமாதானப்படுத்தி கலைக்க முயன்றபோது வன்முறை ஏற்பட்டது. இதில் காவல் துறை அதிகாரி சுபோத்குமாா் சிங் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு புலந்த்ஷஹரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடா்பான குற்றப் பத்திரிகையில் 44 போ் சோ்க்கப்பட்ட நிலையில், 38 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து கொலை குற்றச்சாட்டுக்குள்ளான 5 போ் உள்பட 38 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி கோபால்ஜி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அவா்களுக்கான தண்டனை விவரம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்ட 44 பேரில் 5 போ் இறந்துவிட்டனா். ஒருவா் சம்பவம் நடைபெற்றபோது சிறுவனாக இருந்ததால், அவா் மீதான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க