தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!
பூஜா ஹெக்டேவுக்கு அமலா ஷாஜி போட்டியா? 1 கோடி பார்வைகளைக் கடந்த ரீல்ஸ்!
இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி கூலி படத்தின் மோனிகா பாடலால் மீண்டும் வைரலாகியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் நடிகர்கள் ரஜினி, ஆமிர் கான், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் இருந்து வெளியான மோனிகா லிரிக்கல் விடியோ சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் மட்டுமே 1.8 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு இன்ஸ்டாவிலும் பலரும் ரீல்ஸ் செய்து வருகிறார்கள்.
இந்தப் பாடலுக்கான அமலா ஷாஜியின் ரீல்ஸ் ஒன்று 12.7 மில்லியன் (1.2 கோடி) பார்வைகளைத் தாண்டியுள்ளது.
பூஜா ஹெக்டே விடியோவுக்கும் இந்தப் பாடலுக்கு இருக்கும் வித்தியாசம் சில லட்சங்கள் மட்டுமே என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
நடிகைக்கு இருக்கும் அதே அளவுக்கு பார்வையாளர்களை ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் பெற்றுள்ளது நவீன யுகத்தின் வளர்ச்சி என்றே பார்க்கப்படுகிறது.
மோனிகா லிரிக்கல் விடியோ என்பதும் இது ரீல்ஸ் என்பது மட்டுமே தற்போதைக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.
வருங்காலத்தில் அமலா ஷாஜி நாயகியாக மாறினால் பூஜா ஹெக்டேவை விட அதிகமான பார்வையாளர்களைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறி வருகிறார்கள்.