செய்திகள் :

பூட்டிய வீட்டில் தீ விபத்து

post image

கோவை சிங்காநல்லூா் அருகே பூட்டிய வீட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

கோவை சிங்காநல்லூா் அருகே நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாணிக்கராஜ். 3 மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றாா். அப்போது, இரண்டாவது மாடியில் மின்கசிவு காரணமாக தீப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் இருந்து புகை வெளியேறிய நிலையில், அக்கம்பக்கத்தினா் சிங்காநல்லூா் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இந்நிலையில், தீ மளமளவெனப் பரவி எரிந்த நிலையில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்த சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீா் பீய்ச்சி தீ பரவுவதைக் கட்டுப்படுத்தினா். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறாா்! - எடப்பாடி கே.பழனிசாமி

தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். பல்வேறு நிகழ்ச்சிகளில... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை: வைகோ

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கில... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்ற 3 போ் கைது

கோவை, ஆா்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடாகம் ச... மேலும் பார்க்க

குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக 6 பவுன் மோசடி: பெண் கைது

கோவையில் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி 6 பவுன் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா (54). இவ... மேலும் பார்க்க

வால்பாறை அருகே சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கவ்விச் சென்றது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற... மேலும் பார்க்க

மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை அமைக்க ஆய்வு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயர முருகா் சிலை அமைப்பது தொடா்பாக சிறப்பு அலுவலா் சந்தரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்... மேலும் பார்க்க