திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராசர் பெயர்: தமிழக அரசு அறிவிப்பு!
பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் போராட்டம்!
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளது.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், துர்க் மாவட்டம் பிலாயில் உள்ள பூபேஷ் பாகல் வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகேலின் வீட்டிற்கு வெளியே ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும் தொழிலாளர்களும் கூடியுள்ளனர்.
மாநிலத்தின் உயர்மட்ட காங்கிரஸ் தலைமையை பாஜக தலைமையிலான மத்திய அரசு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் குறிவைக்கப்படுகிறது. இது மத்திய அரசின் சதி என்று பாகல் கூறினார்.
மத்திய அரசின் சதித்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாங்கள் இங்குக் கூடியுள்ளோம் என்று போராட்டக்காரர்களில் ஒருவரான காங்கிரஸ் ஊழியர் தெரிவித்தார்.