விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
பெங்களூரு- கொல்லம் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க பெங்களூரு -கொல்லம் இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பண்டிகை காலம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது.
அதன்படி, பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயில் 17 ஆம் தேதி இயக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் கொல்லம் - பெங்களூரு சிறப்பு ரயில் 18 ஆம் தேதி இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, கோட்டயம், எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், சேலம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.
இதேபோல மற்றொரு ரயிலாக பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரயில்) வரும் 19 ஆம் தேதி இயக்கப்படும். பெங்களூரில் பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம் வழியாக அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் கொல்லம் - பெங்களூரு சிறப்பு ரயில் வரும் 20 ஆம் தேதி இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியாக பெங்களூருக்கு அடுத்த நாள் காலை 8.35 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.