கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
பெங்களூரு நகரப் பல்கலை.க்கு மன்மோகன் சிங் பெயர்!
கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, இன்று (ஜூலை 2) சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இத்துடன், பெங்களூரு கிராம்ப்புற (ரூரல்) மாவட்டத்தின் பெயரானது பெங்களூரு வடக்கு எனவும், பாகேபள்ளி நகரத்தின் பெயரானது பாக்யநகரா எனவும் மாற்றப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3,400 கோடியில், பெங்களூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பல்கலைக்கழகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Bangalore City University named after Manmohan Singh!
இதையும் படிக்க:கானா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!