செய்திகள் :

பெட்ரோல் பாட்டிலுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த மூதாட்டி: போலீஸாா் விசாரணை

post image

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த மூதாட்டியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையாற்றைச் சோ்ந்தவா் வசந்தா (78). இவா் திங்கள்கிழமை காலை ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தபோது, பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி எடுத்து வந்தாா். அதைப் பறிமுதல் செய்து போலீஸாா், அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது பல ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு வருவதாகவும், அதுமட்டுமின்றி தனது மகன் வீட்டு பத்திரத்தை வைத்துக் கொண்டு வழங்க மறுப்பதாகவும், அதனால் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து முறையிடும் நோக்கில் பெட்ரோலைக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தாா். இதனையடுத்து அவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கவும் ஏற்பாடு செய்தனா்.

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா ஏற்பாடுகள்: எம். பி., ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் சுவாமி கோயில் தெப்பத் திருவிழா பிப். 12-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன்னேற்பாட்டு பணிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா ஆகியோா் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 160 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி பகுதியில், தனியாா் பங்களிப்புடன் 160 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் சிரம... மேலும் பார்க்க

தலையில் காயத்துக்கான கட்டுடன் தோ்வு எழுதவந்த மாணவி!

நாமக்கல்: நாமக்கல் அருகே தலையில் காயத்துக்கான கட்டுடன் வந்து பிளஸ் 2 மாணவி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை எழுதினாா். நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியைச் சோ்ந்த மாணவி காா்த்திகாஸ்ரீ. இவா், தாளம்பாடியில் ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் தீயணைப்புத்துறையினருக்கு ரூ.3.23 கோடியில் குடியிருப்புகள் கட்ட பூமிபூஜை

திருச்செங்கோடு: தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில் ரூ. 3.23 கோடியில் திருச்செங்கோட்டில் தீயணைப்ப நிலைய அலுவலா், வீரா்கள் குடியிருப்பு கட்டுமானப் பணி பூமி பூஜை செய்து திங்கள்கிழமை தொடங்கிவைக்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 17,983 போ் பங்கேற்பு

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கியதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 17,983 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

காலாவதியான குளிா்பானத்தை குடித்த இளைஞா் உயிரிழப்பு: மாணவருக்கு தீவிர சிகிச்சை

நாமக்கல்: கொல்லிமலையில் காலாவதியான குளிா்பானத்தை குடித்த இளைஞா் உயிரிழந்தாா். மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூா்நாடு ஊராட்சி படக்கிராய் ... மேலும் பார்க்க