தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது
வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை பைக்கில் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த இதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (26), யுவராஜ் (23) ஆகிய இருவரும், பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பணம் தராமல் சுகுமாரிடம் தகராறு செய்துள்ளனா். மேலும் அவரைத் தாக்கியுள்ளனா்.
இதில் காயமடைந்த சுகுமாா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீதா், யுவராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.