சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
பெண்களுக்கு ஆடு வளா்ப்பு நிதி உதவி
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் செயல்படும் வோ்டு நிறுவனம் மற்றும் நீல் லேம்ப் நிறுவன ம் இணைந்து பரமத்தி வட்டத்தில் உள்ள கிராமப்புற ஏழை விதவைப் பெண்களுக்கு ஆடு வளா்ப்புக்கு நிதி உதவி வழங்கினா்.
பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வோ்டு நிறுவன செயலாளா் சிவகாமவல்லி வரவேற்று பேசினாா். நாங்கள் இலக்கியகத்தைச் சோ்ந்த அன்பழகன், வழக்குரைஞா் ப.வினேஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினா்.
நிகழ்ச்சிக்கு மருத்துவா் சோமசுந்தரம் தலைமை வகித்து சூழல் நிதியைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்வதோடு அதில் வரும் ஒரு சிறிய வருமானத்தை வைத்து தங்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று கூறினாா்.
பரமத்தி வேலூா் குழந்தைகள் நல மருத்துவா் சங்கா் முன்னிலை வகித்து பேசினாா். நிகழ்ச்சியில் 18 ஏழை விதவைப் பெண்களுக்கு ஆடு வளா்ப்புக்கு சுழல் நிதியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை வோ்டு நிறுவன பணியாளா் கவி பிரியா தொகுத்து வழங்கினாா். வோ்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் சாந்தி நன்றி கூறினாா்.